Tuesday, January 15, 2008

உலகப்புகழ்(!) பெற்ற எனது புகைப்படங்களில் ஒன்று.


படத்த பாத்துட்டு கண்டிப்பா பி.சி.ஸ்ரீராம் இல்ல கே.வி.ஆனந்து இப்படி யாரோ போட்டோக்கலையில ஸீட்(Seed அதாவது கொட்டை) போட்ட ஒருபெரிய புள்ளி எடுத்ததுனு நீங்க நினைக்கறது ஏங்காதுலயே கேக்குதுங்க...

ஆனா உண்மைய தவிர வேறெதுவும் பேசறதில்லங்கிறது நம்ம கொள்கையாக இருப்பதால்...இருங்க இருங்க சொல்லிர்றேன்...


படுபயங்கரமா,ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்கிறோமினு எங்க கம்பெனி நினைத்ததால் (ஆனா... நாங்க என்னமோ வேலை செய்யறது ஒரு நாளைக்கு மொத்தமே முணேமுக்கா மணி நேரந்தான்ங்கறது வேற கத)சுற்றுலா ஒண்ணு ஏற்பாடு பண்ணிணாங்க...

அப்படி பொழுதுபோக்க போன எடத்துல பொழுதுபோகாம,நட்டநடுராத்திரியில,கைல இருந்த டார்ச்லைட்ட வச்சுக்கிட்டு என்ன பண்ணலாம்னு யோசித்ததின் விளைவு இந்த புகைப்படம் என்பதை... என்பதை...


இப்ப என்ன சொல்லிட்டன்னு அருவாள தூக்கறீங்க...

இப்படியெல்லாம் கோபப்பட்டால் உடம்புக்கு ஆகாது...

ஆமா சொல்லிப்புட்டேன்...

2 comments:

nagoreismail said...

கோயம்புத்தூர் ஊரை எடுத்த படம் இருந்தால் பதிவிட முடியுமா? தயவுசெய்து சிரிராம், ஆனந்த் போன்று வேண்டாம், அசோக்குமார், பாலுமகேந்திரா எடுத்தது போல் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி - நாகூர் இஸ்மாயில்

துடிப்பும் துடுக்குமாய் கண்ணன் said...

//கோயம்புத்தூர் ஊரை எடுத்த படம் இருந்தால் பதிவிட முடியுமா? தயவுசெய்து சிரிராம், ஆனந்த் போன்று வேண்டாம், அசோக்குமார், பாலுமகேந்திரா எடுத்தது போல் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி - நாகூர் இஸ்மாயில்//
நாகூர் இஸ்மாயில்
நன்றி..தங்களின் வருகைக்கு...
அசோக் குமார் மற்றும் பாலுமகேந்திரா வை பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க...