Wednesday, January 16, 2008

பொங்கலோ பொங்கல்.

ஒரு தமிளன் வீட்டுல,பொங்கல் அன்னிக்கு பொங்க வைக்கலனா எப்படினு...?

முந்தாநாள் சாயங்காலமா நானும் எனது தோழர்களும்(எல்லாரும் ஒத்த(சிங்கிள்) தான்) சேந்து ஒரு மெகாத்திட்டம் போட்டோம்.

இந்த கூத்து ஏன்னு கேக்கறவங்களுக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்குங்க...

தாராபுரம் தாலுக்காவில காட்டுக்காரவலசுன்னு ஒரு மெட்ரோசிட்டியிலுருந்து நம்ம கூடபுதுசா வேலைக்கு ஜாயின் பண்ணின பொறியாளநண்பர் ஒருத்தரு,பொங்கலுக்கு பதினஞ்சு நாளுக்கு முன்னாடியிருந்தே கண்ணீரும் கம்பலயுமா திருஞ்சுக்கிட்டிருந்தாரு...

மூணுநாளைக்கு முன்னாடி பெருங்கொரலெடுத்து அழவே ஆரம்பிச்சிட்டாரு...

என்னமோ ஏதோன்னு எல்லோரும் கேக்க போக,அவரு "தைப்பொங்கலன்னைக்கு பொங்க வைக்காத பொழப்பு ஒரு பொழப்பான்னு" கேவிக்கேவி அழறாரு...

தனியொரு தமிளனுக்கு(!) இன்னல்ன்னா எதையோ அழிக்கலாம்னு நம்ம கவிஞர் ஒருத்தரு(அது யாருங்க...?நம்ம வாலியோ,வைரமுத்தோ...சரியா யாபகம் வரமாட்டேங்குதுங்க...)சொல்லியிருப்பது இந்த நேரத்துலயா எனக்கு ஞாபகம் வரணும்,சரி எப்பிடியோ வந்துருச்சு...விடுங்க...!

இனி ஆகப்போறத பாப்பம்னு,கண்ணத்தொடைக்க அவரு கைல ஒரு பாக்ஸு டிஸ்ஸு பேப்பர கொடுத்துட்டு...தேவயானப்பொருளு என்னென்னனு லிஸ்டப்போட்டேன்...

எதுக்குன்னு கேக்கிறீங்களா...?

சரியாப்போச்சு பொங்கலுக்குத்தேன்...

ஆரம்பிச்சாச்சு...

அங்க இங்கனு சேகரச்ச தகவல்கள வச்சுக்கிட்டு பாற்கடலும்,மத்தும் இல்லாம அமிர்தமே தயாரிச்சிருல்லாம் அப்பிடிங்கற அளவுல நம்ம கான்ஃபிடடன்ட்டு கன்னாபின்னானு ஏறிப்போச்சு...

ஆனா பொங்கலு தயாரிக்கறது ஏதோ பொன்கல்லு தயாரிக்கறமாதிரின்னு அடுப்புல பொங்கப்பானய வச்சதுக்கப்பறந்தான் என் ஸிக்ஸ்த்து ஸென்ஸு மெதுவா அலாரம் அடிக்குது...

நம்ம நண்பருவேற பக்கத்துலேயே நின்னுகிட்டு இப்பவும் மூக்க உறுஞ்சிக்கிட்டே கண்ணக்கண்ண தொடச்சிகிட்டிறுக்காரு ஆன இது ஆனந்தக்கண்ணீரு...

கடவுள் மேலே பெரும் பரத்த போட்டு கண்டின்யு பண்ணினேன்...

ஒருவழியா பொங்கல் பொங்கி நம்ம நண்பரும் "பொங்கலோ பொங்கல்"-"பொங்கலோ பொங்கல்"னு உணர்ச்சிப்பெருக்குல கத்துனது அவிங்க ஊருக்கே கேட்டுச்சுன்னு அவிங்க அப்பாரு போனில கூப்பிட்டு சொல்வாருன்னு நினைக்கறேன்.

இருங்க...இருங்க...

இனிதான் இருக்குது க்ளைமாக்ஸு...

பொங்கல் இந்த அளவுள பொங்கினுது ஏதோ நாம கும்புடர சாமி சக்தியுள்ள சாமின்னு இதோட நிறுத்தியிருக்கலாம்...

அத விட்டுட்டு...

சக்கரபொங்கலும் இப்பவே செஞ்சுருவோம்னு ரெண்டு கிலோ சக்கரைய உள்ளே கொட்டி,சும்மா ஸ்டைலா கிளறுனேன்...பாருங்க...ஏங்கண்ணே பட்டுரும்...ஸ்டைல்னா அப்படி ஒரு ஸ்டைல்...

ஆனா ரெண்டு நிமிஷத்துக்கப்பறம்...

கரண்டியோட சேர்த்து பானையும் சுத்திசுத்தி வர்றதும்,எவ்வளவோ ட்ரை பண்ணியும் கரண்டிய ஏன் வெளில எடுக்கமுடியலைங்கறதும்,அதற்கு மேலா எனது காட்டுக்காரன்வலசு நண்பர் என்னை முறைத்து பார்த்தது,அதுல ஏன் கொலவெறி இருந்தது?நான் ஏன்...?மெதுவா அப்படியே கிளம்பி ஏங்கார ஸ்டார்ட் பண்ணி திரும்பி,திரும்பி பார்த்துட்டே வேகமா வீட்டுக்கு வந்து கதவ பூட்டிட்டு உள்ளேயே அமைதியாக உட்கார்ந்துக்கிட்டிறுக்கறதும்...

ஏன்னு எனக்கு இன்னும் புரியலங்க...!!!

3 comments:

Thekkikattan|தெகா said...

ஹா ஹா, அசத்தல் நகைச்சுவை... வருக!! வருக!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்வரவு...நல்ல நகைச்சுவையா எழுதறீங்க.. சரி அந்த தமிள தமிழ் ன்னு சொல்லுங்க அழுகையே வருது எனக்கு..

கருப்பு பேக்ரவுண்ட் வேணாமே கண்வலிக்குது.

வேர்ட் வெரிஃபிகேஷனும் வேண்டாம்.. பின்னூட்டம் போட வரவங்க நேரம் பொன்னானது. :-)
font change seythu adichu correct thane...

துடிப்பும் துடுக்குமாய் கண்ணன் said...

நன்றி,தங்களின் வருகைக்கும்...கருத்துக்கும்...
மாற்றிக்கொள்கிறேன்...